×

வெல்லம், நாட்டுச்சர்க்கரை விலை : மூட்டைக்கு 60 ரூபாய் உயர்ந்தது

 

ஈரோடு, அக்.23: இந்த வாரம் வெல்லம், நாட்டுச்சர்க்கரை விலை மூட்டைக்கு ரூ. 60 உயர்ந்துள்ளது. ஈரோடு அருகே உள்ள சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று முன் தினம் 30 கிலோ எடை கொண்ட 2,600 மூட்டை நாட்டு சர்க்கரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், ஒரு மூட்டை ரூ. 1,240 முதல் ரூ. 1,310 வரை விலை போனது.

இதேபோல, உருண்டை வெல்லம் 2,800 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை, ஒரு மூட்டை ரூ. 1,290 முதல் ரூ. 1,350 வரை விற்பனையாகின. அச்சு வெல்லம் 510 மூட்டைகள் வந்திருந்தன. இவை ஒரு மூட்டை ரூ. 1,340 முதல் ரூ. 1,405 வரை விற்பனையாகின. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ. 15ம், உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் ஆகியவை மூட்டைக்கு ரூ. 60ம் விலை உயர்ந்தன.

The post வெல்லம், நாட்டுச்சர்க்கரை விலை : மூட்டைக்கு 60 ரூபாய் உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது